தம்பி விஜய்! அஞ்சாதே... துணிந்து நில்... இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு
சொகுசு கார் விவகாரத்தில் நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. இதனால் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து சீமான் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்! "ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! என பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்க்கு ஆதரவாக, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அன்புத்தம்பி விஜய்!
— சீமான் (@SeemanOfficial) July 15, 2021
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!
துணிந்து நில்!
இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!
தொடர்ந்து செல்!
"ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”
என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! @actorvijay pic.twitter.com/0Ooa7lp2pm