விமானம் மூலம் நாளை திருச்சி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

tamilnadu-politics-samugam
By Nandhini Jun 10, 2021 04:35 AM GMT
Report

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து காரில் கல்லணை கால்வாய்யை நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

கல்லணை கால்வாயில் கடைமடை வரைக்கும் தண்ணீர் சென்றடைவதற்கு வசதியாக நவீனப்படுத்தும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியுடன் இந்த பணிகள் தொடர்ந்து நடக்கிறது. எனவே, நாளை கல்லணை கால்வாய்க்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட இருக்கும் நிலையில் இருப்பதால், 65 கோடி நிதியில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர், திருவாரூர் சென்று அங்கு பணிகளை முடித்துவிட்டு அங்கேயே ஓய்வெடுக்கும் முதல்வர், மறுநாள் 12ம் தேதி அன்று மேட்டூர் அணைக்கு சென்று தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். 

விமானம் மூலம் நாளை திருச்சி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! | Tamilnadu Politics Samugam

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14