பெருமாள் கோவில் வாசலில் அசைவ உணவு விநியோகம் - சிக்கியலில் சிக்கிய எம்.பி.தயாநிதி!

tamilnadu-politics-samugam
By Nandhini Jun 07, 2021 09:32 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, கோவில் வாசலில் அசைவ உணவை கொடுத்த திமுகவினரின் செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கடந்த 3ம் தேதி திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவுவதால் தமிழக முதல்வர் அவர்கள் இருக்கும் இடங்களிலேயே கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதனையடுத்து, அனைத்து மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன், ஒருபகுதியாக, சென்னை ராயப்பேட்டையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் மற்றும் எம்.எல்.ஏ எழிலன் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது.

அங்குள்ள பெருமாள் கோவிலின் வாசலில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைத்து அடைக்கப்பட்டு, அசைவ உணவு கொடுக்கப்பட்டது.

இதற்கு, பாஜக உள்ளிட்ட பலர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவில் வாசலில் வைத்து அசைவ உணவுகளை வழங்கியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.