வெங்கையா நாயுடுவின் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கிய டுவிட்டர் நிறுவனம்! - எதிர்ப்பு கிளம்பியதால் எடுத்த நடவடிக்கை!
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கு ஆக்டிவ் ஆக இல்லாமல் போனதால் மீண்டும் ப்ளூ டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக்கை இன்று காலை ட்விட்டர் நிறுவனம் நீக்கி இருக்கிறது. வெரிஃபைட் என்று சொல்லப்படும் ப்ளூ டிக் கொண்டவர்களின் பக்கங்கள் தினமும் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்.
ஆனால், வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கம் கடந்த 6 மாதமாக எந்தவித செயல்பாடும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால், டுவிட்டர் பக்கத்திலிருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டதாக துணை ஜனாதிபதியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்ப்பு கிளம்பியதால், வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்திற்கு மீண்டும் ப்ளூ டிக்கை கொடுத்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
