முதல்வருக்கு நன்றி தெரிவித்த பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா - எதற்காக தெரியுமா?
கொரோனா நோயாளிக்கு மருந்துகளை ஏற்பாடு செய்துக் கொடுத்ததற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா நன்றி தெரிவித்திருக்கிறார்.
கொரோனா 2ம் அலை இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இந்த பெருந்தொற்றில் சிக்கித் தவித்து வருகிறார்கள். கொரோனாவால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. இதனால், பல நோயாளிகளுக்கு மருந்து மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட அத்திவாசியங்கள் கிடைக்காத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு உதவி செய்ய சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த 1ம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த மணி தேவி என்ற கொரோனா நோயாளிக்கு ஆம்போடெரிசின் என்ற மருந்து தேவைப்படுவதாக ஜுவாலா கட்டா உதவி கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டேக் செய்தார்.
உடனடியாக அந்த நோயாளிக்கு தேவையான மருந்தை அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், உரிய நேரத்தில் மருந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரியான நேரத்தில் மருந்தை ஏற்பாடு செய்துக் கொடுத்த முதல்வருக்கு ஜுவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பதிவில், ஒரு உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. அந்த கொரோனா நோயாளிக்கு உங்கள் உதவியுடன் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜுவாலா கட்டா, நடிகர் விஷ்ணு விஷாலை திருமணம் செய்துக் கொண்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
Thank you sir @mkstalin for ur prompt action to save a life in dindigul ????
— Gutta Jwala (@Guttajwala) June 2, 2021
The patient has gotten the prescribed medications with your help ?? pic.twitter.com/apRhlEREFy
Need amphotericin-B by today at Dindigul, tamilnadu
— Gutta Jwala (@Guttajwala) June 1, 2021
Name : Mani devi
Age : 52
Requirement : AMPHOTERICIN-B (21 vials)
Hospital : Maeoris hospital
location : Dindigul, tamilnadu
Contact : 9790531017 ( Sabari)@mkstalin sir need your help ASAP ????