அதிமுக முன்னாள் அமைச்சர் மீது துணை நடிகை பரபரப்பு புகார்!
tamilnadu-politics-samugam
By Nandhini
கடந்த 5 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக சாந்தினி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் போலீசிடம் கொடுத்த புகாரில் மனுவில் குறிப்பிட்டதாவது -
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தார். தற்போது என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக துணை நடிகை தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்