தடுப்பூசியால் தான் நான் உயிர் பிழைத்தேன் – அமைச்சர் துரைமுருகன் தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒரே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசிப் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தான் நமது பாதுகாவலன், நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இந்நிலையில், தடுப்பூசியால் தான் உயிர் பிழைத்தேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால்தான் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.