தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்த வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

tamilnadu-politics-samugam
By Nandhini May 22, 2021 09:20 AM GMT
Report

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்த வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வரும் 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.

இதனையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 10 மணி முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. தினசரி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.


இக்கூட்ட முடிவில், ஒருவாரம் ஊரடங்கு தளர்வுக்கற்று பின்பற்றினால் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் என அறிவுறுத்தப்பட்டது.

அதனையடுத்து, அனைத்து கட்சி எம்எல்ஏக்கள், இடம்பெற்ற சட்டமன்ற ஆலோசனை குழுவிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊரடங்கை நீட்டிக்க ஒப்புதல் கொடுத்தனர்.

இதனையடுத்து வரும் ஒரு வாரத்திற்கு எந்த வித தளர்வுகளின்றி ஊரடங்கு பின்பற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்த வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamilnadu Politics Samugam

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு-

  • தமிழகத்தில் மே 24ம் தேதி முதல் எந்த வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது.
  • வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும், நாளையும் தனியார், அரசு பேருந்துகள் செல்ல அனுமதி
  • பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி
  • மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி
  • இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி
  • நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்த வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamilnadu Politics Samugam

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்த வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamilnadu Politics Samugam