அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரூ.13.8 லட்சம் பறிமுதல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்ததால், அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை காலை முதல் மாலை 6 வரை நடைபெற்றது. இதனையடுத்து, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனக்கு நெருங்கியவர்களுக்கு எஸ்.பி வேலுமணி கொடுத்ததும், ஒரே ஐ.பி முகவரியிலிருந்து ஏராளமான டெண்டர்கள் எடுக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த சோதனையில் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலிருந்து 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்புத்தொகை ஆவணமும், மாநகராட்சி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், வேலுமணி வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டக சாவியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.