முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு
அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த காலங்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.