பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
tamilnadu-politics-meeting-modi-r-n-ravi
By Nandhini
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அந்த சந்திப்பில், மாநிலத்தின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபின் முதல் முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் ஆளுநர் மாளிகை, மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் பிரதமருடன் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்ததாக கூறப்பட்டிருக்கிறது.