அரசியலுக்கு வருகிறாரா கிருத்திகா உதயநிதி? அவர் கொடுத்த பளிச் விளக்கம்
politics-
tamilnadu-
krithika-udayanidhi
By Nandhini
அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு கிடையாது என்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியான திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்திருக்கிறார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார்.
அப்போது, குதிரைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடந்தது. குதிரைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துப் பொருட்களை கிருத்திகா உதயநிதி வழங்கினார்.
அப்போது அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளித்து பேசுகையில், அரசியலுக்கு வருவதற்கான எந்த திட்டமும் இல்லை என்றார்.