எதிர்த்து நின்ற அனைவரையும் டெபாசிட் காலி செய்த மூதாட்டி : 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

tamilnadu-politics-election
By Nandhini Oct 13, 2021 03:23 AM GMT
Report

தேர்தலில் எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றிருக்கிறார். 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்ட மூதாட்டி பெருமாத்தாள், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எதிர்த்து நின்ற அனைவரையும் டெபாசிட் காலி செய்த மூதாட்டி : 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி | Tamilnadu Politics Election