ஊரக உள்ளாட்சித் தேர்தல் - திமுக அமோக வெற்றி... பதவிகளை அள்ளியது
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. 140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கின.
இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. காலை 7.15 நிலவரப்படி பெரும்பாலான இடங்களை திமுகவே வெற்றி பெற்றுள்ளது. கட்சிகள் சின்னத்தில் போட்டியிட்ட 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 137 இடங்களின் நிலவரம் தெரிய வந்திருக்கிறது. இதில் திமுக கூட்டணி 133 இடங்களில் முன்னணி அல்லது வெற்றி பெற்றிருக்கிறது.
பாமக ஓரிடத்திலும் அதிமுக கூட்டணி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் 1208 பதவிகளுக்கான நிலவரங்கள் தெரிய வந்திருக்கிறது. இதன்படி திமுக கூட்டணி 891 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் பெற்றிருக்கின்றன. அதிமுக கூட்டணி 181 இடங்களில் மட்டுமே முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருக்கிறது.
பாமக 33, அமமுக 5, தேமுதிக 1, மற்றவர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னும் 100ம் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கான முடிவுகள் தெரிய வேண்டி இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடந்து வருகின்றது. இத்தேர்தலில் ஆளும் திமுக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இத்தேர்தல் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan
