முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு- விமானம் மூலம் செல்கிறார்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 5 மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்ல உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் செல்லும் ஸ்டாலின், அங்கு திருப்பூரில் உள்ள நேதாஜி தொழிற்பேட்டையில் ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து கோவை கொடிசியா, குமரகுரு கல்லூரியிலும் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அத்துடன் இரவு மதுரைக்கு செல்லும் அவர் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
பின்னர், அங்கிருந்து திருச்சி சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு 10 லட்சத்து 62 ஆயிரம் மருந்துகளை கொள்முதல் செய்துள்ள நிலையில் முதற்கட்டமாக 9 லட்சத்து 62 ஆயிரம் மருந்துகள் தமிழகம் வந்துள்ளன.