‘தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம்!
‘தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.
சமந்தா நடிப்பில் அமேசான் பிரைம் இணையத்தளத்தில் ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகி இருக்கிறது. இந்த இணையத்தொடர் தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்டுகிறது.
தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
‘தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்யக்கோரி தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது -
ஈழத்தமிழர் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் முன்னோட்டம் தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தின் மதநல்லிணக்கத்தை காப்பது மிகவும் கடினமாகி விடும் என்பதால் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும், ‘தி பேமிலி மேன் 2’ தொடரை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்த தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
