தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சந்தித்துப் பேசினார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி பதவியேற்றார்.
அப்போதிலிருந்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் கடந்த 12ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்கள்.
இதனையடுத்து, கடந்த 13ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநருடன் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசினார். இது மரியாதை நிமித்தமான நடைபெற்ற சந்திப்பு என்று தகவல் வெளியாகி உள்ளது.