நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சி என்றால் அது திமுக தான் - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
வாக்குச்சாவடிகளை கைப்பற்றி பெற்றுவிடலாம் என்று திமுகவினர் நினைத்திருந்தார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசுகையில், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக உறுப்பினர்கள் களப்பணிகளையும் செய்யவில்லை.
வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது வாக்குகளை மக்கள் பதிய விடாமல் தடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாக்குச்சாவடிகளை கைபற்றி பெற்றுவிடலாம் என்று திமுகவினர் நினைத்திருந்தார்கள். அதற்கு இந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
திமுகவின் கடந்த கால நிகழ்வுகளை பார்த்தால் ஒருபக்கம் எதிர்ப்பார்கள் மற்றொரு பக்கம் ஆதரிப்பார்கள் நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக திமுக தன்னை தொடர்ந்து 55 ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
