அமைச்சர் தங்கத்தை உருக்குவதிலே குறியாக உள்ளார் – எச்.ராஜா விமர்சனம்

ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்திருக்கின்றன. ஆனால் அமைச்சர் தங்கத்தை உருக்குவதிலே குறியாக இருக்கிறார் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் துவங்கி வைத்திருக்கிறார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் உள்ள பொன் இனங்களை உருக்கி 24 கேரட் சுத்த தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஹெச்.ராஜா  தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. ஆனால் அமைச்சர் தங்கத்தை உருக்குவதிலே குறியாக உள்ளார்.’ என  பதிவிட்டுள்ளார்


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்