நாங்கள் எப்போதும் வளரும் கட்சி..இன்று இல்லை என்றால்..நிச்சயம் நாளை வெல்வோம் – சீமான்

tamilnadu-politics
By Nandhini Oct 13, 2021 06:31 AM GMT
Report

தமிழக முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது அக்.6 மற்றும் அக்.9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது.

இது குறித்து சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது -

நாங்கள் படுதோல்வி அடையவில்லை. நாங்கள் எப்போதும் வளரும் கட்சி. வளருகின்ற கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தான் வளர்ச்சி அடையும். களத்தில் நிற்கும் நாங்களே தோல்வி என்று நினைக்கவில்லை.

வேடிக்கை பார்க்கும் நீங்கள் ஏன் தோல்வியடைந்ததாக நினைக்கிறீர்கள். நாங்கள் இந்த அரசியலில் முன்னேறிக் கொண்டு தான் செல்கிறோம். நாங்கள் முன்னேறிக் கொண்டு போவதால் தான், எங்களை இத்தனை அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றது. எங்களை போன்று திமுக, அதிமுக தனித்து போட்டியிடுமா? இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.