மோடி குழந்தைக்கு பெயர் - போட்டாப் போட்டி போடும் தமிழகம் - அண்ணாமலை பேட்டி
மோடி குழந்தைக்கு பெயர் வைப்பதில் தமிழகத்தில் போட்டி நடந்து வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது -
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்கப்படும் குழு தமிழக அரசு சொல்லி இருக்கிறது. அப்போ இவங்களே ஒத்துக்கொண்டார்கள். இத்தனை நாள் மத்திய அரசு திட்டங்கள் சரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என்று ஒத்துக்கொள்கிறார்கள்.
இதை தான் பல காலமாக நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அதாவது 10 மாசம் ஒரு குழந்தையை சுமந்து பெத்த மோடிஜி அந்த வலியோடு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தால், தமிழ்நாட்டுக்குள் அந்த குழந்தைக்கு யாரு பெயர் வைப்பது என்ற போட்டி நடைபெறுகிறது. இப்போது, அதை உணர்ந்து கொண்டு குழு அமைத்திருக்கிறார்கள்.
அந்தக் குழுவில் திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்களும் போட்டிருக்கிறார்கள். பிஜேபி எம்.எல்.ஏக்களை அவர்கள் உறுப்பினர்களாக போட்ட மாதிரி தெரியவில்லை. அதனால் மத்திய அரசின் ஒரு ஒரு திட்டமும் கூட தமிழக மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இருட்டடிப்பு செய்யாமல் அதை அப்படியே தமிழக மக்களுக்கு கொடுத்து விட்டால் போதும், நாங்கள் வேறு எதுவுமே கேட்கவில்லையே. அந்தக் கமிட்டியில் பிஜேபியை போடவே வேண்டாம்.
எங்கள் வேலைகளை நாங்கள் தெருவில் போய் வீதி வீதியாக செய்து கொள்கிறோம். அந்த ஏசி ரூமில் இருக்கிற கமிட்டியில் நீங்களே போய் உட்கார்ந்து கொள்ளுங்கள். நல்லா கமிட்டி மீட்டிங் போடுங்க, நல்லா பேசுங்க, ஒரே ஒரு வேண்டுகோள்… நல்லபடியாக இந்த திட்டத்தை போய் கடைசி மனிதன் வரை சேர்த்து விடுங்க. அதுதான் பாஜக மாநிலத் தலைவரின் அன்பான வேண்டுகோள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.