என் மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமே கிடையாது - ஏனென்றால்... மனம் திறந்து பேசிய வைகோ!

tamilnadu-politics
By Nandhini Oct 09, 2021 05:31 AM GMT
Report

எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமே கிடையாது. ஏனென்றால் நான் 56 வருடங்கள் கஷ்டப்பட்டு உள்ளேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6ம் தேதி நடந்து முடிந்து. இத்தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், இன்று 2ம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருகே உள்ள கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார். அப்போது உங்களுடைய மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா? என்று நிருபர் ஒருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் கிடையாது.

ஏனென்றால், நான் 56 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 வருடங்கள் லட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் காரில் பயணம் செய்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் 5 வருடங்கள் சிறை என வாழ்க்கையை நான் அழித்து கொண்டேன்.

எனது மகனும் கஷ்டப்பட வேண்டாம், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். கட்சியில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரும் 20ம் தேதி தெரிந்து விடும. 20ம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும். அப்போது பெரும்பான்மை என்ன முடிவு என்ன என்பது தெரியவரும் என்றார். 

என் மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமே கிடையாது - ஏனென்றால்... மனம் திறந்து பேசிய வைகோ! | Tamilnadu Politics