“அவரு சேகர் பாபு இல்ல.. அவரு செயல் பாபு” – அமைச்சருக்கு புகழ் மாலை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்

tamilnadu-politics
By Nandhini Sep 11, 2021 06:21 AM GMT
Report

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பேசியதாவது -

இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயலாற்றி வந்து கொண்டிருக்கிறார். சேகர் பாபு என்று அழைப்பதைவிட செயல் பாபு என்று அழைப்பதே சிறந்ததாக இருக்கும். எண் என்று சொல்வதற்கு முன்னால் எண்ணெயாக விரைந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக செயல்படுகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான். கோவில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் செயல் வடிவம் பெற்றிருக்கிறது. சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறோம். அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க இருக்கிறேன் என்றார். 

“அவரு சேகர் பாபு இல்ல.. அவரு செயல் பாபு” – அமைச்சருக்கு புகழ் மாலை சூட்டிய முதல்வர் ஸ்டாலின் | Tamilnadu Politics