டிராக்டர் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு!
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு வருகிறது. இருப்பினும், மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது
. மேகதாது அணை விவகாரத்தில் தஞ்சாவூரில் தமிழக பாஜகவை சேர்ந்தவர்கள் கர்நாடக பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டிராக்டர் ஓட்டிச் சென்று நேற்று போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தில் பிரேமலதா பேசுகையில், “கர்நாடக முதலமைச்சருக்கு எச்சரிக்கையுடன் வேண்டுகோள்; ஓசூர் எல்லை வரை வந்துவிட்டோம், பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும், நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன்” என்றார்.
இதனையடுத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உட்பட 349 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஓசூரில் மேகதாது அணைக்கு எதிராகவும், விதிகளை மீறி போராட்டம் நடத்திய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.