உங்களுக்கு வந்தா ரத்தம்... மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? நடிகை விந்தியா ஆவேசம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்த அறிவிப்பால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எச்சரித்தார். இந்த எச்சரிக்கைக்கு முதல்வரும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் ‘எந்த மிரட்டலுக்கும் திமுக அடிபணியாது’என்று உறுதிபட கூறினர்.
இந்த விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்ந்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான விந்தியா தனது சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். அது சமூக நீதி, ஆனா என் குடும்பம் மட்டும்தான் திமுக தலைவர் ஆகலாம். இது மு.க.ஸ்டாலின் நீதி. உங்களுக்கு வந்தா ரத்தம்... மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று வடிவேலு டயலாக்கை சொல்லி கடுமையாக பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.