காங்கிரசில் இணைகிறாரா நடிகர் சிவகுமார்?
tamilnadu-politics
By Nandhini
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கோடி ஏற்றினார்.
அப்போது, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் கைராட்டையை திறந்து வைத்தார் கே. எஸ். அழகிரி. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். சேவாதள தொண்டர்கள் அணியும் வெள்ளை குல்லாவை நடிகர் சிவகுமார் அணிந்து கொண்டார்.
நிகழ்வில், கே.எஸ்.அழகிரிக்கு காந்தி பற்றிய புத்தகம் ஒன்றினையும் அளித்தார் சிவகுமார். இதனையடுத்து, ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

