நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு? – ஜெயக்குமார் நக்கல்

tamilnadu-politics
By Nandhini Aug 12, 2021 10:15 AM GMT
Report

வேலுமணிக்கு அடுத்து ஜெயக்குமார் தான் என்று சொல்லும் அமைச்சர் நாசர் எப்போது தமிழ்நாடு டிஜிபி ஆனார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு?.. இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ #திமுக அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கே.. அதுக்கு எப்போ ஆக்ஷன் எடுப்பீங்க நாசர் சார்.? வேணும்னா சொல்லுங்க அந்த பட்டியல நான் தரேன். DVAC- ஐ முடுக்கி விடுங்க என்று நக்கலாக பதிவிட்டிருக்கிறார்.

குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்படுகிறது; தவறு இல்லை என்றால் தங்களது நேர்மையை அவர்கள் நிரூபித்துக் காட்டலாம் என்று அமைச்சர் நாசர் கூறியிருந்தார். அவர் இவ்வாறு கூறிய நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயக்குமார் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.