தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி பட திறப்பு விழா - நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் திறப்பு விழாவும், தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவும் இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளார். இன்று மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உருவ படத்தை திறந்து வைக்க உள்ளார்.
சுமார் 1 மணி நேரம் நடக்கவிருக்கும் இந்த விழாவில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
