கழுத்தை அறுத்து விடுவோம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சால் பரபரப்பு?
கழுத்தை அறுத்து விடுவோம் என்று அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆவேசமாக பேசி உள்ளதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது.
அக்கூட்டத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேசுகையில், மதிமுகவில் 25 ஆண்டுகளாக இருக்கின்ற மல்லை சத்யா நம்மை நம்பித்தான் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவரது தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் ரொம்ப மனவருந்தினார்.
உள்ளாட்சித் தேர்தல் மிக முக்கியமானது. கட்சியினருக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமையாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால், தேர்தலில் துரோகம் செய்தால் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலை வந்துவிடும். தலைமை அறிவிக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் பகுதிகளை கைப்பற்றிய ஆகவேண்டும். அதில் மட்டும் யாராவது தோல்வியடைந்தால் கட்சி ஒன்றிய செயலாளர்கள் கழுத்தை அறுத்து விடுவோம் என்று ஆவேசமாக பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இவர் பேசியுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
