வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு ஒதுக்கீடு - தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாமக
tamilnadu-politics
By Nandhini
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், பட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி, பட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சி.சிவகுமார், எஸ்.சதாசிவம், ஆர்.அருள் ஆகியோர் சந்தித்து, அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.
