தமிழுக்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த அசத்தலான அறிவிப்பு!

tamilnadu-politics
By Nandhini Jul 27, 2021 09:22 AM GMT
Report

 தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியோரைச் சிறப்பிக்கும் வகையில், புதிய விருது ஒன்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் மகத்தான, “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்படவுள்ளது.

இவ்விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு முதலமைச்சர் தலைமையில்,தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் விருதாளருக்குப் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, தமிழக முதலமைச்சர் கையால் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழுக்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த அசத்தலான அறிவிப்பு! | Tamilnadu Politics