ஜெயலலிதா பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தை முடக்கும் நோக்கத்தில் செயல்படும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
விழுப்புரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தை முடக்கும் நோக்கத்தில் செயல்படும் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாக்டர். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்கும் நோக்கில் செயல்படும் திமுக அரசையும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட மாணவர்கள் கல்வி நலனுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மீண்டும் இயக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு தெற்கு கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட அதிமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சக்கரபாணி அர்ஜுனன் குமரகுரு மற்றும் தகவல் தொழில்நுட்பம், மாணவரணி, மகளிரணி, எம்.ஜி.ஆர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது தமிழக அரசையும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
