தமிழக ஆளுநரை திடீரென நேரில் சந்தித்தார் அண்ணாமலை! காரணம் இதுதானாம்!
இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சந்தித்தார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தின் ஆளுநரைச் சந்தித்தது எங்கள் பாக்கியம். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது. தமிழக அரசியலில் அவருக்கு இருக்கும் பொறுப்பினையும் நான் எப்போதும் போற்றுவேன். இன்று அவருடன் செலவழித்த நேரத்தை என்னால் மறக்கமுடியாது, என்றும் என் நினைவில் இருக்கும் என்றார்.
தமிழக பாஜக துணைத்தலைவராக இருந்த அண்ணாமலை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
