மருத்துவமனையில் ‘ஒரே இடத்தில் இருவரும்’ சசிகலா என்ட்ரி - எடப்பாடி அப்பீட்!

tamilnadu-politics
By Nandhini Jul 20, 2021 08:30 AM GMT
Report

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அங்கு சசிகலா என்ட்ரி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலா வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வேகமாக வெளியேறினார்.

அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேற, சசிகலா மருத்துவமனைக்குள் என்ட்ரி கொடுத்தார். தனது ஆதரவாளர்களுடன் மிடுக்காக சசிகலா நடந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மதுசூதனனின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பின்பு செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக மீது அதீத பற்று கொண்டவர் மதுசூதனன். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் வந்தேன். அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றார்.  

மருத்துவமனையில் ‘ஒரே இடத்தில் இருவரும்’ சசிகலா என்ட்ரி - எடப்பாடி அப்பீட்! | Tamilnadu Politics