முதல்வரான பிறகு முதன்முறையாக குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

tamilnadu-politics
By Nandhini Jul 19, 2021 04:41 AM GMT
Report

இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். 2வது முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு டெல்லிக்கு சென்றிருக்கிறார்.

நேற்று சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்தனர்.

அதனையடுத்து, தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதல்வருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து பேச உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நண்பகல் 12 மணிக்கு சந்திக்க இருக்கிறார். குடியரசு தலைவருடனான இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் எழுவர் விடுதலை, நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரான பிறகு முதன்முறையாக குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்! | Tamilnadu Politics