தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றார்
tamilnadu-politics
By Nandhini
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பதவியேற்றார்.
இதனையொட்டி கோவையிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன யாத்திரையாக புறப்பட்ட அண்ணாமலை, இன்று சென்னை வந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
