காமராஜர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 119 வது பிறந்தநாள் இன்று கொண்டடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவர் குறித்து நினைவலைகளை பகிர்ந்தும், அவரின் சாதனைகளை நினைவு கூர்ந்தும் வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பல்லவம் இல்லம் அருகே உள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) July 15, 2021
ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்!
அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்! pic.twitter.com/6XguRV7DS5