திடீரென டெல்லியில் முகாமிட்டுள்ள குஷ்பு - முக்கிய பதவி கிடைக்குமா? அரசியலில் பரபரப்பு
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லியில் முகாமிட்டு, பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து வந்தார் எல்.முருகன். அதன் பின்பு அவர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது நடிகை குஷ்பு டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இதனையடுத்து, டெல்லியில் குஷ்பு பாஜகவின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதனால், அரசியல் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஷ்பு கட்சியில் முக்கிய பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதனால்தான், அவருக்கு இன்னமும் கட்சியில் பதவி கொடுக்கப்படாமல் உள்ளது. சட்டமன்றத் பொதுத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்புவுக்கு, அத்தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கருத்து கணிப்புகள் சொல்லின.
இதனால், குஷ்புவின் மேல் உள்ள செல்வாக்கினை டெல்லி தலைமை கவனித்தது. அமித்ஷாவே வந்து குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், தற்போது மத்திய இணை அமைச்சராகியுள்ளார். தமிழக பாஜகவில் துணைத்தலைவராக இருந்த அண்ணாமலை தலைவராகியுள்ளார்.
இதையடுத்து குஷ்பு டெல்லியில் முகாமிட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, முருகன், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து பேசி வருகிறார். கட்சியும் குஷ்புவுக்கு முக்கிய பதவியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
