நடிகர் விஜய் செய்தது தவறே இல்லை.. அவரை நடிகன் என்று பார்ப்பது தான் தவறு - விஜய்க்கு ஆதாரவாக களமிறங்கிய கார்த்தி சிதம்பரம் எம்.பி.
நடிகர் விஜய் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். அதற்கு வரி கட்ட அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், வரி அதிகமாக இருந்ததையடுத்து நடிகர் விஜய் அதற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால், வழக்கில் தன்னை நடிகர் என்று அவர் குறிப்பிடவில்லை. சென்னை உயர்நீதிமன்றமோ, வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடுத்தவர் யார் என்பதை தெரிந்து கொண்டது.
இத்தனை கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் வரி ஏய்ப்பு செய்வதா? என்று, விஜய் வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அதிகாரிகள் சொன்ன வரியை கட்டச்சொல்லிவிட்டு, வரி ஏய்ப்பு செய்ய நினைத்ததற்காக ரூ.1 லட்சம் அபராதமும் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், சமூகவலைத்தளங்களில் நடிகர் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால், ‘இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு என்று தெரிவித்திருக்கிறார்’ கார்த்தி சிதம்பரம் எம்.பி.