இனி எந்த புத்தகத்திலும் எடப்பாடி படம் இருக்கக்கூடாது - உத்தரவிட்ட திமுக அரசு எதிராக வழக்கு!

tamilnadu-politics
By Nandhini Jul 13, 2021 08:33 AM GMT
Report

நமது திராவிட இயக்கத்தின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி படங்கள் இருப்பதால், விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களின் வரிப் பணம் வீணாகக் கூடாது. விநியோகம் செய்யப்படவில்லை என்றால், பிரிண்ட்டான அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை பயன் இல்லாமல் போய்விடும்.

அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களை படங்களை பிரிண்ட் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   

இனி எந்த புத்தகத்திலும் எடப்பாடி படம் இருக்கக்கூடாது - உத்தரவிட்ட திமுக அரசு எதிராக வழக்கு! | Tamilnadu Politics