தினகரன் பின் வாங்கினால் என்ன... நான் விடுவதாக இல்லை - சசிகலா முடிவுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் அதிர்ச்சி
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைக்குச் சென்றார். இதனையடுத்து, சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்து விட்டு திரும்பிய சசிகலா, அரசியல் இறங்கி பட்டய கிளப்புவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மீகம் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து, அவர் பல கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி உள்ளார். இந்நிலையில், பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பதவியை அறிமுகம் செய்தனர். அந்த அதிமுக பொதுக்கூழு கூட்டம் செல்லாது என்றும், அந்த தீர்மானம் சட்ட விரோதமானது.
அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு வரும் 20ம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கில் மற்றொரு மனுதாரரான டிடிவி தினகரன் அண்மையில் இந்த வழக்கினை வாபஸ் பெற்றார். துணைப்பொதுச்செயலாள என்ற பதவியிலிருந்து தன்னை நீக்கியதால் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், அதிமுகவை விட்டு தனியாக அமமுக கட்சியை தொடங்கி டிடிவி தினகரன் நடத்தி வந்ததால் அவர் இந்த மனுவை வாபஸ் பெற்றாலும் கூட சசிகலா தொடர்ந்து வழக்கை நடத்தி வருவார் என்று அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.
வழக்கினை தொடர்ந்து நடத்தப்போவதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால் அதிமுகவினருக்கிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஓபிஎஸ் -இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.