எல்.முருகனுக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!
tamilnadu-politics
By Nandhini
நேற்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக 43 உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயரும் இடம் பெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று பதவியேற்றுக் கொண்ட எல்.முருகன். இவருக்கு தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை ஆகியவற்றில் இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எல்.முருகனுக்கு வாழ்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்.முருகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.