மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் எல்.முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

tamilnadu-politics
By Nandhini Jul 08, 2021 05:06 AM GMT
Report

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றிருக்கும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், மாண்புமிகு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.