இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் காலமானார்
tamilnadu-politics
By Nandhini
இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் உடல் நலகுறைவினால் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீர்பத்ர சிங் இமாச்சல பிரதேசத்தின் 4-வது முதல்வரானார். 9 முறை எம்.எல்.ஏவாகவும், 5 முறை எம்.பியாகவும், 5 முறை முதல்வராகவும் பதவியில் ஆட்சி புரிந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி வீர்பத்ர சிங்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
