மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்ற 43 மத்திய அமைச்சர்களும் பதவியேற்பு
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக இடம்பெற்ற 43 மத்திய அமைச்சர்களும் பதவியேற்று வருகிறார்கள். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்கிறார்.
நாராயன் தாட்டூ ரானே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இவர், எம்.எல்.ஏ.வாக 6 முறை பதவி வகித்துள்ளார். 1971ம் ஆண்டு முதல் 1984 வரை வருமான வரித்துறையில் சேவையாற்றியுள்ளார்.
சர்பானந்த சோனாவால்: அசாமின் முதல்வராக 2016 முதல் 2021வரை பதவி வகித்துள்ளார். அசாமில் 2 முறை எம்.பியாக பதவிக்கு தேர்வானார். மத்திய அமைச்சரவையில் விளையாட்டு துறை இணை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார்.
விரேந்திர குமார்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராக பணியாற்றியுள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா: முந்தைய காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளார்.
ராமச்சந்திர பிரசாத் சிங்: பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு 2வது முறையாக தேர்வாகி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
அஸ்வின் வைஷ்ணவ்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அரசு - தனியார் பங்களிப்புக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார். ஒடிசாவில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
பசுபதி குமார் பராஸ்: பீகார் அரசில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். பீகாரின் ஹாஜிபூர் தொகுதி எம்.பி.
கிரண் ரிஜ்ஜூ: மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
ராஜ்குமார் சிங்: இந்திய முன்னாள் உள்துறை செயலாளராக இருந்தவர். 2014 முதல் பீகார் அர்ராவுக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
ஹர்தீப் சிங் புரி: மத்திய அமைச்சரவையில் வீட்டுவசதி துறை இணையமைச்சராக இருந்துள்ளார்.
மன்சுக் மாண்டவ்யா: மத்திய அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து இணையமைச்சராக இருந்துள்ளார்.