தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் தேர்வு?
மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதனால், மோடி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனையில், 43 பேரை புதிதாக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அந்த பட்டியலும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதனால், இவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனையடுத்து, பா.ஜ.க எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போதே எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.