குடியரசு தலைவரிடம் ஒரு கேள்வி கேட்ட நடிகை குஷ்பு - டுவிட்டரில் வைரல்

tamilnadu-politics
By Nandhini Jul 07, 2021 10:27 AM GMT
Report

கர்நாடகா, ஹரியானா, மிசோரம், இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த 8 மாநிலங்களிலும் ஆண்கள் மட்டும் தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ஒரு பெண் கூட ஏன் இடம்பெறவில்லை என்று குடியரசுத் தலைவருக்கு பாஜக நிர்வாகி என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், குடியரசுத்தலைவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். எட்டு மாநிலங்களிலும் ஆளுநர் இடத்திற்கு தகுதியான ஒரு பெண்ணை கூட நீங்கள் பார்க்கவில்லையா? ஏன் இந்த பாகுபாடு? நீங்கள் இவ்வாறு செய்வது வேதனையானது. மிகவும் காயப்படுத்துகிறது/ உங்களை நான் புண்படுத்தவில்லை என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவு தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.