மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. நந்திகிராமில் பாஜக வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி கெளஷிக் சந்தா விசாரிக்க மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் நீதிபதி கெளஷிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு உள்ளதாக மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, நீதித்துறையை தவறாக சித்தரித்ததாக மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
