சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

tamilnadu-politics
By Nandhini Jul 05, 2021 07:26 AM GMT
Report

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டமும், கோரிக்கைகளும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் சென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார்.

அப்போது, அவர் சைக்கிளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சைக்கிளில் அணிவகுப்பாக சென்றனர். சுமார் 500 மீட்டர் இடைவெளியில் சைக்கிள் மூலம் அவர்கள் பயணம் செய்தார்.

கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறி சைக்கிள் பயணம் செய்யக்கூடாது என போலீசார் எரித்தனர். இதனையும் மீறி, தேமுதிகவினர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்! | Tamilnadu Politics