முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து சென்ற போலீசார் - கிடுக்கிப்பிடி விசாரணை!

tamilnadu-politics
By Nandhini Jul 04, 2021 03:33 AM GMT
Report

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சமீபத்தில் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, அவரால் மூன்று முறை தான் கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரையடுத்து, மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவரை பெங்களூரில் போலீசார் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், மணிகண்டனை காவல்துறை விசாரணையில் எடுக்க அனுமதிக் கோரி இருந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அதன் பேரில், மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இதன் காரணமாக மணிகண்டனை போலீசார் மதுரைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகு மணிகண்டன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.   

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து சென்ற போலீசார் - கிடுக்கிப்பிடி விசாரணை! | Tamilnadu Politics